தனுஷ் விளக்கம் கொடுத்தாச்சு, பிரச்சனையை விடுங்க

4 TAMIL MEDIA  4 TAMIL MEDIA
தனுஷ் விளக்கம் கொடுத்தாச்சு, பிரச்சனையை விடுங்க

Saturday, 23 January 2016 09:27

தனுஷ் ஜல்லிக்கட்டுக்கு எதிராக கருத்து தெரிவித்ததாக யாரோ ஒரு கருத்து கந்தசாமி வதந்தியை பரப்ப, ஏற்கனவே கொதிப்பில் இருக்கும் பலருக்கும் இதனால் ரத்தக் கொதிப்பு. பலர் அவரது நம்பரை தேடிப்பிடித்து அபிஷேகம் செய்தார்களாம்.

சிலர் அவரது ட்விட்டர் அக்கவுன்ட்டில் காளையை இறக்கிவிட்டு துவம்சம் செய்தார்கள். எரிச்சலில் இன்னும் கொஞ்சம் எண்ணை. அதாவது அவர் விலங்குகள் நல வாரிய அமைப்பான பீட்டாவின் தூதுவர் என்றும் கூறிவிட்டார்கள். இதுபோல இதற்கு முன் தன்னை பற்றி வந்த வதந்திகளுக்கெல்லாம் வாய் மூடி மவுனம் காத்த தனுஷ், இந்த முறை சும்மாயிருக்கவில்லை. ஐயா... நான் அப்படி சொல்லவேயில்ல. நான் ஜல்லிக்கட்டுக்கு என்னோட முழு ஆதரவையும் தெரிவிக்கிறேன். மற்றவங்க சொல்ற மாதிரி, நான் ஒன்றும் பீட்டாவின் விளம்பர தூதர் அல்ல என்றும் கூறிவிட்டார். நல்லவேளை...அவர் மட்டும் உரிய நேரத்தில் விளக்கம் தரவில்லை என்றால் இந்நேரம் எந்த கோர்ட்ல, யாரு கேஸ் போட்ருப்பாங்களோ?

மூலக்கதை