நியூசிலாந்து அணி இலங்கை அணியுடனான போட்டியில் சாதனை வெற்றி

தமிழ்நியூஸ்நெற்  தமிழ்நியூஸ்நெற்
நியூசிலாந்து அணி இலங்கை அணியுடனான போட்டியில் சாதனை வெற்றி

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் இரண்டாவது போட்டி Christchurchலுள்ள (Hagley Oval) ஹக்லே ஓவல் மைதானத்தில் இடம்பெற்றது.

இந்த போட்டியில் 118 எனும் வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 8.2 ஓவர்களில் 118 ஓட்டங்களைப் பெற்று 10 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றது.

நியூசிலாந்து சார்பில் கப்டில்30 பந்துகளில் 93 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொண்டார். இதில் 9 நான்கு ஓட்டங்களும் 8 ஆறு ஓட்டங்களும் உள்ளடங்கும். இவர் 17 பந்துகளில் அரைச்சதம் கடந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த வெற்றிக்காக நியூசிலாந்து அணியினர் வெறுமனே 50 பந்துகளை மாத்திமே எடுத்துக் கொண்டதுடன் ஓட்டவிகிதம் 14.16 ஆகும். இது இரண்டாவதாக துடுப்பெடுத்தாடி வெற்றி பெற்ற அணி பெற்றுக் கொண்ட இரண்டாவது அதிகூடிய ஓட்ட விகிதமாகும்.

இதற்கு முன்னர் பங்களாதேஷ் அணிக்கெதிராக நியூசிலாந்து அணியினர் பெற்ற 15.83 எனும் ஓட்ட விகிதமே முதலாவது அதிகூடிய ஓட்ட விகிதமாகும்.

முன்னதாக துடுப்பாட்டத்தில் இலங்கை அணி வீரா்கள் அனைவரும் 20க்கும் குறைவான ஓட்டங்களைப் பெற்ற நிலையில் ஆட்டமிழந்தமை குறிப்பிடத்தக்கது.

பந்துவீச்சில் நியூசிலாந்து அணி சார்பாக ஹென்றி 4 விக்கெட்டுக்களையும் மெக்கிலங்கஹென் 3 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினா்.

போட்டியின் நாயகனாள கப்டில் தேர்வானார்.

மூலக்கதை