‘அழகு குட்டி செல்லம்’
திரைச்செய்தி Thursday, December 24th, 2015
இயக்குநர் சார்லஸ் இயக்கத்தில், ‘நீயா நானா’ புகழ் ஆன்டனி தயாரிப்பில் உருவாகும் படம் ‘அழகு குட்டி செல்லம்’. கென், சாணக்யன், நேகா, ராஜேஷ், யாழினி ஆகிய குழந்தை நட்சத்திரங்கள் இதில் அறிமுகமாகிறார்கள். தேஜஸ்வினி, கருணாஸ், தம்பி ராமையா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.“இது குழந்தைகளை முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரக்கூடிய படம். தேவையற்ற காட்சிகள், வசனங்கள் இருக்காது. அதேசமயம் நல்ல கருத்துக்களைச் சொல்ல முயற்சித்திருக்கிறோம்,” என்கிறார் இயக்குநர் சார்லஸ்.