தமிழக அணியின் கேப்டனாக வருண் சக்கரவர்த்தி நியமனம்

  தினத்தந்தி
தமிழக அணியின் கேப்டனாக வருண் சக்கரவர்த்தி நியமனம்

சென்னை, 18-வது சையத் முஷ்டாக் அலி டி20 கிரிக்கெட் போட்டி லக்னோ, ஆமதாபாத், புனே, இந்தூர் உள்பட பல்வேறு இடங்களில் வருகிற 26-ந் தேதி முதல் டிசம்பர் 18-ந் தேதி வரை நடக்கிறது. இதில் ‘எலைட்’ பிரிவில் பங்கேற்கும் 32 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு மோத உள்ளன. ‘டி’ பிரிவில் இடம் பிடித்துள்ள தமிழக அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தானை ஆமதாபாத்தில் சந்திக்கிறது. இந்த போட்டிக்கான தமிழக அணியை தமிழ்நாடு கிரிக்கெட் சங்க செயலாளர் பகவான்தாஸ் ராவ் அறிவித்துள்ளார். சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி முதல்முறையாக கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.தமிழக அணி: வருண் சக்கரவர்த்தி (கேப்டன்), என்.ஜெகதீசன் (துணை கேப்டன்), துஷார் ரஹேஜா, அமித் சாத்விக், ஷாருக்கான், ஆந்த்ரே சித்தார்த், பிரதோஷ் ரஞ்சன் பால், ஷிவம் சிங், சாய் கிஷோர், எம்.சித்தார்த், டி.நடராஜன், குர்ஜப்னீத் சிங், இசக்கி முத்து, சோனு யாதவ், சிலம்பரசன், ரித்விக் ஈஸ்வரன்.

மூலக்கதை