நம்பர் 1 இடத்தை உறுதி செய்த அல்காரஸ்

  தினத்தந்தி
நம்பர் 1 இடத்தை உறுதி செய்த அல்காரஸ்

துரின், முன்னணி 8 வீரர்கள் இடையிலான ஏ.டி.பி. இறுதிசுற்று எனப்படும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியின் துரின் நகரில் நடந்து வருகிறது. இதில் ‘ஜிம்மி கனோர்ஸ்’ பிரிவில் ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ் 6-4, 6-1 என்ற நேர் செட்டில் லோரென்ஜோ முசெட்டியை (இத்தாலி) வீழ்த்தி ‘ஹாட்ரிக்‌’ வெற்றியை பதிவு செய்தார். இதன் மூலம் 22 வயதான அல்காரஸ் ஆண்டின் இறுதியில் நம்பர் 1 இடத்தை உறுதி செய்தார். இனி அடுத்த 2 மாதங்களுக்கு அவரது நம்பர் 1 இடத்துக்கு ஆபத்து இல்லை. அல்காரஸ் அரையிறுதியில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் அல்லது கனடாவின் பெலிக்ஸ் ஆகர் அலியாசிம் ஆகியோரில் ஒருவரை சந்திப்பார்.

மூலக்கதை