ஜப்பான் மாஸ்டர்ஸ்: லக்‌ஷயா சென் அரையிறுதிக்கு முன்னேற்றம்

  தினத்தந்தி
ஜப்பான் மாஸ்டர்ஸ்: லக்‌ஷயா சென் அரையிறுதிக்கு முன்னேற்றம்

டோக்கியோ , ஜப்பான் மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி அங்குள்ள குமாமோட்டோவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஒற்றையர் காலிறுதியில் இந்திய வீரர் லக்‌ஷயா சென், முன்னாள் உலக சாம்பியனான லோ கீன் யூவை (சிங்கப்பூர்) எதிர்கொண்டார். பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய லக்‌ஷயா சென், 21-13, 21-17 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்றார். இதனால் லக்‌ஷயா சென் அரையிறுதிக்கு முன்னேறினார்.

மூலக்கதை