உலகக்கோப்பையை வென்றதும் ரஜினிகாந்த்... - ஹர்மன்பிரீத் பகிர்ந்த சுவாரசியம்
சென்னை, அண்மையில் முடிவடைந்த 13-வது ஐ.சி.சி. மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி 52 ரன் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை சொந்தமாக்கியது. உலகக் கோப்பையை முதல்முறையாக உச்சி முகர்ந்த இந்திய அணியை பிரதமர், ஜனாதிபதி நேரில் பாராட்டி உற்சாகப்படுத்தினர். வீராங்கனைகளுக்கு கோடிக்கணக்கில் பரிசு மழை கொட்டியது. உலகக்கோப்பையை வென்ற பிறகு இந்திய பெண்கள் அணியின் கேப்டனான ஹர்மன்பிரீத் கவுர் நேற்று சென்னை வந்தார். அவருக்கு மேள, தாளங்களுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அத்துடன் ஒரு பள்ளி மற்று கல்லூரியில் அவருக்கு பாராட்டு விழா நடந்தது. அதில் விழா ஒன்றில் பேசிய் ஹர்மன்பிரீத் கவுர், “உலக சாம்பியன் ஆன பிறகு நான் தாய்லாந்துக்கு சுற்றுலா சென்றேன். அப்போது நடிகர் ரஜினிகாந்த் செல்போனில் தொடர்பு கொண்டு பேசி வாழ்த்து தெரிவித்தார். சிறுவயதில் டெலிவிஷனில் பார்த்து மகிழ்ந்த நபர் போனில் அழைத்து பேசியது உற்சாகமாக இருந்தது. அப்போது அவர்‘இறுதிப்போட்டியை நேரில் பார்க்க வரவேண்டும் என்று விரும்பினேன். அப்போது சிங்கப்பூரில் படப்பிடிப்பு இருந்ததால் வர இயலவில்லை. ஆனால் எனது ஒட்டுமொத்த குடும்பமும் போட்டியை பார்க்க வந்து இருந்தது. நமது அணி வீராங்கனைகள் சிறப்பாக செயல்பட்டனர்’ என்று என்னிடம் சொன்னார்” என கூறினார்.




ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு-டிரம்ப் நேரில் சந்திப்பு; காசா போர் முடிவுக்கு வருமா?
வங்காளதேசத்தில் சிறுமி பலாத்காரம்; ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 3 பேர் துப்பாக்கி சூட்டில் பலி
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
’ஓபன் செய்த உடன் ரீல்ஸ்’ இன்ஸ்டாகிராமில் வரும் சூப்பர் அப்டேட்
டெல்லி: திடீரென தாக்கிய குரங்கு; 7-வது மாடியில் இருந்து குதித்த மத்திய அரசு ஊழியர்
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு; நடவடிக்கை எடுக்க அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
ஆயுதபூஜை விடுமுறை: 4 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்
ஆயுத பூஜைக்கு மேலும் சில சிறப்பு ரெயில்கள் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
