முதல் டெஸ்ட்: தென் ஆப்பிரிக்கா நிதான ஆட்டம்
கொல்கத்தா, இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டனில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் பவுமா பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி முதல் இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரியான் ரிக்கல்டன் - எய்டன் மார்க்ரம் களமிறங்கினர். இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதில் மார்க்ரம் தனது முதல் ரன்னை எடுக்க 23 பந்துகள் எடுத்து கொண்டார். முதல் விக்கெட்டுக்கு 57 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் இந்த ஜோடி பிரிந்தது. ரிக்கல்டன் 23 ரன்களில் பும்ரா பந்துவீச்சில் போல்டானார். அடுத்து முல்டர் களமிறங்கினார். சிறிது நேரத்திலேயே மார்க்ரமையும் (31 ரன்கள்) பும்ரா காலி செய்தார். அடுத்து வந்த பவுமா (3 ரன்), குல்தீப் சுழலில் சிக்கினார். பின்னர் டோனி டி சோர்ஜி களமிறங்கினார். தற்போது வரை தென் ஆப்பிரிக்க அணி 27 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 105 ரன்கள் அடித்துள்ளது. முல்டர் 22 ரன்களுடனும், டோனி டி சோர்ஜி 15 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இப்போது உணவு இடைவேளை விடப்பட்டுள்ளது.




ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு-டிரம்ப் நேரில் சந்திப்பு; காசா போர் முடிவுக்கு வருமா?
வங்காளதேசத்தில் சிறுமி பலாத்காரம்; ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 3 பேர் துப்பாக்கி சூட்டில் பலி
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
’ஓபன் செய்த உடன் ரீல்ஸ்’ இன்ஸ்டாகிராமில் வரும் சூப்பர் அப்டேட்
டெல்லி: திடீரென தாக்கிய குரங்கு; 7-வது மாடியில் இருந்து குதித்த மத்திய அரசு ஊழியர்
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு; நடவடிக்கை எடுக்க அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
ஆயுதபூஜை விடுமுறை: 4 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்
ஆயுத பூஜைக்கு மேலும் சில சிறப்பு ரெயில்கள் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
