நான் வெல்லப்போகும் ஒரே டாஸ்... - இந்திய கேப்டன் சுப்மன் கில்

  தினத்தந்தி
நான் வெல்லப்போகும் ஒரே டாஸ்...  இந்திய கேப்டன் சுப்மன் கில்

கொல்கத்தா, இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டனில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் பவுமா பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி முதல் இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணி நிதானமாக ஆடி வருகிறது.முன்னதாக இந்த ஆட்டத்தையும் சேர்த்து இதுவரை 8 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டுள்ள சுப்மன் கில் ஒரே ஒரு முறை மட்டுமே டாஸில் வெற்றி பெற்றுள்ளார். இந்நிலையில் இந்த போட்டியில் டாஸை இழந்த பின் சுப்மன் கில் அளித்த பேட்டியில், “நான் வெல்லப் போகும் ஒரே டாஸ் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில்தான் என்று நம்புகிறேன்” என சிரித்துக்கொண்டே கூறினார்.

மூலக்கதை