முதல் டெஸ்ட்: அயர்லாந்தை வீழ்த்தி இன்னிங்ஸ் வெற்றி பெற்ற வங்காளதேசம்
சில்ஹெட், வங்காளதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அயர்லாந்து கிரிக்கெட் அணி 2 டெஸ்ட், 3 டி20 கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகள் இடையே முதலில் டெஸ்ட் தொடர் நடைபெறுகிறது. அதன்படி வங்காளதேசம் - அயர்லாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சில்ஹெட்டில் கடந்த 11ம் தேதி தொடங்கியது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி முதல் இன்னிங்சில் 92.2 ஓவர்களில் 286 ரன்கள் அடித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ஸ்டிர்லிங் 60 ரன்கள் சேர்த்தார். வங்காளதேசம் தரப்பில் மெஹிதி ஹசன் மிராஸ் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய வங்காளதேசம் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 587 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இதன் மூலம் முதல் இன்னிங்சில் வங்காளதேசம் 301 ரன்கள் முன்னிலை பெற்றது. அந்த அணியின் ஹசன் ஜாய் அதிகபட்சமாக 171 ரன்களும், கேப்டன் ஷாண்டோ 100 ரன்களும் குவித்தனர். இதனை தொடர்ந்து 301 ரன்கள் பின் தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய அயர்லாந்து அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 70.2 ஓவர்கள் தாக்குப்பிடித்த அயர்லாந்து அணி 2-வது இன்னிங்சில் 254 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் வங்காளதேசம் இன்னிங்ஸ் மற்றும் 47 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அத்துடன் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. அயர்லாந்து தரப்பில் ஆண்டு மெக்பிரைன் 52 ரன்கள் அடித்தார். வங்காளதேசம் தரப்பில் ஹசன் முரத் 4 விக்கெட்டுகளும், தைஜுல் இஸ்லாம் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். வங்காளதேச வீரர் மஹ்முதுல் ஹசன் ஜாய் ஆட்ட நாயகன் விருது வென்றார்.




ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு-டிரம்ப் நேரில் சந்திப்பு; காசா போர் முடிவுக்கு வருமா?
வங்காளதேசத்தில் சிறுமி பலாத்காரம்; ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 3 பேர் துப்பாக்கி சூட்டில் பலி
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
’ஓபன் செய்த உடன் ரீல்ஸ்’ இன்ஸ்டாகிராமில் வரும் சூப்பர் அப்டேட்
டெல்லி: திடீரென தாக்கிய குரங்கு; 7-வது மாடியில் இருந்து குதித்த மத்திய அரசு ஊழியர்
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு; நடவடிக்கை எடுக்க அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
ஆயுதபூஜை விடுமுறை: 4 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்
ஆயுத பூஜைக்கு மேலும் சில சிறப்பு ரெயில்கள் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
