ஐ.பி.எல்.: குஜராத் அணியிலிருந்து அதிரடி வீரரை வாங்கிய மும்பை

  தினத்தந்தி
ஐ.பி.எல்.: குஜராத் அணியிலிருந்து அதிரடி வீரரை வாங்கிய மும்பை

மும்பை, 19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் மினி ஏலம் அடுத்த மாதம் (டிசம்பர்) 16-ந்தேதி அபுதாபியில் நடைபெறுகிறது. இதையொட்டி தக்கவைக்கப்படும் மற்றும் விடுவிக்கப்படும் வீரர்களின் பட்டியலை நாளைக்குள் 10 அணிகளும், ஐ.பி.எல். நிர்வாகத்திடம் சமர்ப்பிக்க வேண்டும். அதற்கு முன்பாக பரஸ்பர பேச்சுவார்த்தையின் மூலம் வீரர்கள் வர்த்தக பரிமாற்றம் நடந்து வருகிறது. இந்த வகையில் கடந்த சீசனில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக ஆடிய அதிரடி ஆல்-ரவுண்டர் ரூதர்போர்டு (வெஸ்ட் இண்டீஸ்) மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மாறுகிறார். அவரை முந்தைய ஏலத்தொகையான ரூ.2.6 கோடிக்கு மும்பை அணி வாங்கி உள்ளது. NEWS Sherfane Rutherford has been traded from @gujarat_titans to @mipaltan.Details https://t.co/zi36xK6OHg#TATAIPL | @SRutherford50_ pic.twitter.com/4vlSV88jUv

மூலக்கதை