2026 டி20 உலகக் கோப்பை: சென்னை, கொல்கத்தா உள்பட 5 இடங்கள் தேர்வு

  தினத்தந்தி
2026 டி20 உலகக் கோப்பை: சென்னை, கொல்கத்தா உள்பட 5 இடங்கள் தேர்வு

புதுடெல்லி, 10-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை இந்தியா, இலங்கை இணைந்து நடத்துகின்றன. அடுத்த ஆண்டு (2026) பிப்ரவரி 7-ந்தேதி தொடங்கி மார்ச் 8-ந்தேதி வரை இந்த போட்டி நடக்கிறது. இதில் நடப்பு சாம்பியன் இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, முதல்முறையாக தகுதி பெற்றுள்ள இத்தாலி உள்பட 20 அணிகள் பங்கேற்கின்றன. அவை 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்-8 சுற்றுக்கு தகுதி பெறும். இதற்கான போட்டி அட்டவணை அடுத்த வாரம் வெளியிடப்படுகிறது. இதையொட்டி இந்திய கிரிக்கெட் வாரியத்துடன் இணைந்து போட்டிக்கான இடத்தை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) இறுதி செய்துள்ளது. இதன்படி இந்தியாவில் சென்னை ,ஆமதாபாத், டெல்லி, கொல்கத்தா, மும்பை ஆகிய நகரங்கள் உலகக் கோப்பை போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளன. உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியமான ஆமதாபாத்தில் இறுதிப்போட்டியை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

மூலக்கதை