2-வது டெஸ்ட்: துருவ் ஜூரெல் சதம்.. இந்தியா ஏ 255 ரன்களில் ஆல் அவுட்

  தினத்தந்தி
2வது டெஸ்ட்: துருவ் ஜூரெல் சதம்.. இந்தியா ஏ 255 ரன்களில் ஆல் அவுட்

பெங்களூரு, இந்தியா ஏ - தென் ஆப்பிரிக்கா ஏ அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பெங்களூருவில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட் செய்த இந்திய ஏ அணிக்கு முன்னணி வீரர்களான கே.எல். ராகுல் (19 ரன்), சாய் சுதர்சன் (17 ரன்), தேவ்தத் படிக்கல் (5 ரன்), கேப்டன் ரிஷப் பண்ட் (24 ரன்) ஆகியோர் ஏமாற்றம் அளித்தனர். இதனையடுத்து 6-வது வரிசையில் இறங்கிய துருவ் ஜூரெல் சதம் விளாசியதுடன் கடைசி வரை களத்தில் நின்று அணி கவுரவமான நிலையை எட்ட உதவினார். இந்தியா ஏ முதல் இன்னிங்சில் 77.1 ஓவர்களில் 255 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. ஜூரெல் 132 ரன்கள் (175 பந்து, 12 பவுண்டரி, 3 சிக்சர்) குவித்தார். தென் ஆப்பிரிக்க ஏ அணியின் வேகப்பந்து வீச்சாளர் டியான் வான் வுரென் 4 விக்கெட் வீழ்த்தினார். அத்துடன் முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இன்று 2-வது நாள் ஆட்டம் நடக்கிறது.

மூலக்கதை