‘‘சினிமாவில் எதுவும் நிரந்தரம் கிடையாது'' -நடிகை நந்திதா ஸ்வேதா
சென்னை, ‘அட்டக்கத்தி' படத்தில் அறிமுகமாகி ‘எதிர்நீச்சல்', ‘இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா', ‘முண்டாசுப்பட்டி', ‘அசுரவதம்', ‘கபடதாரி', ‘ரத்தம்', ‘ரணம்' போன்ற பல படங்களில் நடித்தவர் நந்திதா ஸ்வேதா. தமிழ் தாண்டி தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்து வரும் நந்திதா ஸ்வேதா, தற்போது தமிழ் - தெலுங்கு படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். புதிய வெப் தொடர்களிலும் ஒப்பந்தமாகி இருக்கிறார். நந்திதா ஸ்வேதா தனது திரைப்பயணம் குறித்து பகிர்ந்தார். அதன் விவரம் இதோ... ``நான் ஒரு சினிமா வெறி பிடித்தவள். சிறுவயதில் இருந்தே சினிமா பைத்தியம் என்றுகூட சொல்லலாம். உனது ஆசை என்ன? என்று யார் கேட்டாலும், நடிகை ஆகப் போகிறேன் என்று தயங்காமல் கூறுவேன். நிகழ்ச்சி ஒன்றில் என்னை சந்தித்த இயக்குனர் விஜயகுமார், என்னை அவரது இயக்கத்தில் வெளியான `நந்தா லவ்ஸ் நந்திதா' என்ற கன்னட படத்தில் நடிக்க வைத்தார். அதன்பிறகு சினிமாவில் நடிக்க தொடங்கிவிட்டேன். சினிமாவில் எதுவும் நிரந்தரம் கிடையாது. ஒரு படம் ‘ஹிட்’ அடித்ததும் நாம் பெரிய ஆள் என்று நினைத்து விடக் கூடாது. அதுதான் மிகப்பெரிய பொய். ஒரே படத்தில் யாருமே கோடி கோடியாக சம்பாதிக்க முடியாது. படிப்படியாகவே ஒரு நிலையை பிரபலங்கள் அடையமுடியும். சாதனையில் மட்டுமல்ல, சம்பளத்திலும் தான். நான் முதல் படம் நடித்துவிட்டு 3 ஆண்டுகள் படிக்க சென்றுவிட்டேன். கல்லூரி முடித்தபிறகு நடித்த படம் தான் `அட்டகத்தி'. நான் நடித்ததிலேயே ‘அட்டகத்தி' தான் எனக்கு பிடித்த படம். அந்த படம் தான் எனக்கு மிகப்பெரிய அடையாளத்தை கொடுத்தது. அதனை தொடர்ந்து ‘எதிர்நீச்சல்', ‘உள்குத்து' படங்களில் நடிக்கும்போது பலர் இந்த படங்கள் வேண்டாம் என்றார்கள். மீறி நடித்தேன். அந்த படங்கள் ‘ஹிட்’ அடித்தன. சில படங்கள் நம்பி நடித்தும் கைகொடுக்கவில்லை. வெற்றி, தோல்வி இரண்டுமே இரண்டற கலந்தது தான் சினிமா. சினிமாவில் நான் கற்றுக்கொண்ட பெரிய பாடம் பொறுமை தான்.வேண்டாம் என்று உதறித் தள்ளிய படங்கள் நிறைய வெற்றி பெற்றுள்ளன. ஆனால் அதற்காக வருத்தப்படவில்லை. முடிந்தது முடிந்தது தான். அதற்காக கவலைப்பட்டு கிடப்பது முட்டாள்தனம். அடுத்தது என்னவென்று போய்க்கிட்டே இருக்கவேண்டும். கவர்ச்சியாக நடிப்பேன், நடிக்கமாட்டேன் என்றெல்லாம் முடிவு எடுத்து வைத்துக்கொள்வது கிடையாது. கதைக்கு தேவைப்பட்டால் எந்த மாதிரியான கதாபாத்திரங்களிலும் நடிக்கத் தயார்''. என்றார்.




காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு-டிரம்ப் நேரில் சந்திப்பு; காசா போர் முடிவுக்கு வருமா?
வங்காளதேசத்தில் சிறுமி பலாத்காரம்; ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 3 பேர் துப்பாக்கி சூட்டில் பலி
பிலிப்பைன்சை தொடர்ந்து வியட்நாமை தாக்கிய புயல்; 11 பேர் பலி
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
’ஓபன் செய்த உடன் ரீல்ஸ்’ இன்ஸ்டாகிராமில் வரும் சூப்பர் அப்டேட்
டெல்லி: திடீரென தாக்கிய குரங்கு; 7-வது மாடியில் இருந்து குதித்த மத்திய அரசு ஊழியர்
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு; நடவடிக்கை எடுக்க அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
ஆயுதபூஜை விடுமுறை: 4 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்
ஆயுத பூஜைக்கு மேலும் சில சிறப்பு ரெயில்கள் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
