பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: அமெரிக்க வீராங்கனை காலிறுதிக்கு முன்னேற்றம்

  தினத்தந்தி
பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: அமெரிக்க வீராங்கனை காலிறுதிக்கு முன்னேற்றம்

ரியாத், முன்னணி 8 வீராங்கனைகள் மற்றும் டாப்-8 ஜோடிகள் மட்டும் பங்கேற்கும் பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் நடைபெற்று வருகிறது . இதில் ஒற்றையர் பிரிவில் களம் இறங்கும் வீராங்கனைகள் ஸ்டெபி கிராப், செரீனா வில்லியம்ஸ் என்ற பெயரில் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொருவரும் தங்கள் பிரிவில் உள்ள மற்றவர்களுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். இந்நிலையில், இன்று நடைபெற்ற 3வது சுற்றில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, இத்தாலியின் ஜாஸ்மின் பவுலினி உடன் மோதினார். பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய பெகுலா 6-2, 6-3 என்ற செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்றார் . இதனால் அவர் காலிறுதிக்கு முன்னேறினார்.

மூலக்கதை