இலங்கை பாடசாலைகளுக்கான விடுமுறை: வெளியான முக்கிய அறிவிப்பு - லங்காசிறி நியூஸ்

  இலங்காசிறி
இலங்கை பாடசாலைகளுக்கான விடுமுறை: வெளியான முக்கிய அறிவிப்பு  லங்காசிறி நியூஸ்

இலங்கையில் அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில் 2025 ஆம் ஆண்டிற்கான மூன்றாம் தவணையின் முதல் கட்டம் நாளை (07) முடிவடையும் என  அந்நாட்டின் கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது. அதற்கமைய, சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளின் இரண்டாம் கட்டம் 08.12.2025 திங்கட்கிழமை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.மேலும், முஸ்லிம் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் 24.11.2025 திங்கட்கிழமை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. உயர்தர பரீட்சையை முன்னிட்டு 7 ஆம் திகதியுடன் நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படவுள்ளது. இதனை தொடர்ந்து டிசம்பர் 8ஆம் திகதி பாடசாலைகளில் கற்றல், கற்பித்தல் செயற்பாடுகள் மீள ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

மூலக்கதை