ரூ 50 கோடி வசூலை எட்டிய பிரணவ் மோகன்லாலின் “டைஸ் ஐரே”
மலையாள சினிமாவில் 'ரெட் ரெயின்' என்ற திரில்லர் படம் மூலமாக இயக்குனரானவர், ராகுல் சதாசிவன். இவரது இயக்கத்தில் மம்முட்டி நடித்து 2024-ம் ஆண்டு வெளியான 'பிரமயுகம்' திரைப்படங்கள், ஹாரர் வகையில் வித்தியாசமாக அமைந்திருந்தது. 'பிரமயுகம்' படத்தை தயாரித்த நிறுவனம், மீண்டும் ராகுல் சதாசிவன் இயக்கத்தில் ‘டைஸ் ஐரே’ படத்தை தயாரித்துள்ளது. இந்தப் படத்தில் மோகன்லாலின் மகன், பிரணவ் மோகன்லால் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.சுஷ்மிதா பட், கிபின் கோபிநாத், ஜெயா குருப் மற்றும் அருண் அஜிகுமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர். கிறிஸ்டோ சேவியர் இசையமைத்துள்ளார். ‘டைஸ் ஐரே’ என்தன் பொருள், “ஆன்மாக்கள் நியாயம் தீர்க்கப்பட்டு சொர்க்கம் அல்லது நரகத்திற்கு அனுப்பப்படும் இறுதித் தீர்ப்பு” என்பதாகும். ஒய் நாட் ஸ்டூடியோஸ் மற்றும் நைட் ஷிப்ட் நிறுவனங்களின் கூட்டுத் தயாரிப்பில் இப்படம் உருவாகியுள்ளது. நாயகன் பிரணவ் சந்திக்கும் அமானுஷ்ய விஷயங்களும் பேய்க்கதையுமாக உருவான இப்படம் கடந்த அக்டோபர் 31 ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தின் தொழில்நுட்ப பணிகள் மற்றும் நடிகர்களின் நடிப்பும் கவனம் பெற்றதால் ஹாரர் தருணங்கள் ரசிகர்களிடம் பயத்தைக் கொடுத்தது. இந்த நிலையில், ‘டைஸ் ஐரே’ வெளியான ஒரே வாரத்தில் ரூ. 50 கோடியை வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.#DIESIRAE crosses ₹ 50 Crores* in Global Box Office Collections ! ️ https://t.co/CKbLmGD6ML#DIESIRAE Starring @impranavlalWritten & Directed by @rahul_madkingProduced by @chakdyn @sash041075Banner @allnightshifts @studiosynotDistribution Partners @homescreenent… pic.twitter.com/L3FxJdbwIu




காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு-டிரம்ப் நேரில் சந்திப்பு; காசா போர் முடிவுக்கு வருமா?
வங்காளதேசத்தில் சிறுமி பலாத்காரம்; ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 3 பேர் துப்பாக்கி சூட்டில் பலி
பிலிப்பைன்சை தொடர்ந்து வியட்நாமை தாக்கிய புயல்; 11 பேர் பலி
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
’ஓபன் செய்த உடன் ரீல்ஸ்’ இன்ஸ்டாகிராமில் வரும் சூப்பர் அப்டேட்
டெல்லி: திடீரென தாக்கிய குரங்கு; 7-வது மாடியில் இருந்து குதித்த மத்திய அரசு ஊழியர்
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு; நடவடிக்கை எடுக்க அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
ஆயுதபூஜை விடுமுறை: 4 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்
ஆயுத பூஜைக்கு மேலும் சில சிறப்பு ரெயில்கள் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
