விஜய்யின் “ஜன நாயகன்” பர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு

  தினத்தந்தி
விஜய்யின் “ஜன நாயகன்” பர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு

சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை, போன்ற வெற்றிப் படங்களை இயக்கியவர் இயக்குநர் எச்.வினோத். தற்போது இவர் விஜய்யை வைத்து ’ஜனநாயகன்’ படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் எடிட்டிங் பணிகள் வரை முடிவடைந்ததுள்ளதால் உறுதியாக பொங்கல் வெளியீடாக அடுத்தாண்டு ஜனவரி 9 ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இதில், நாயகியாக பூஜா ஹெக்டேவும் முக்கிய கதாபாத்திரத்தில் மமிதா பைஜூவும் நடித்துள்ளனர். தீவிர அரசியலில் களமிறங்கி இருக்கும் விஜய் நடிக்கும் கடைசி படம் இதுதான் என்று கூறப்படுகிறது. இதனால் படத்துக்கு சினிமா தாண்டி அரசியல் களத்திலும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. வழக்கமான விஜய் படம் போன்று இல்லாமல், இந்த படத்தில் அரசியல் நெடி அதிகம் இருப்பதாக தெரிய வந்துள்ளது. பிரியாமணி, பாபி தியோல், கவுதம் மேனன், நரேன் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் தீபாவளிக்கு வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் கரூர் சம்பவத்தை தொடர்ந்து 'ஜனநாயகன்' படத்தின் அப்டேட்டை படக்குழுவினர் ஒத்திவைத்ததாக கூறப்படுகிறது.பூஜா ஹெக்டே பிறந்த நாளையொட்டி அவரின் கதாபாத்திர அறிமுக போஸ்டரை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது. இந்த நிலையில், ‘ஜன நாயகன்’ படத்தின் பர்ஸ்ட் சிங்கிள், வரும் 8-ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளதுThalapatheeee Entryyy from Nov 8th #Thalapathy @actorvijay sir @KvnProductions #HVinoth @hegdepooja @anirudhofficial @thedeol @_mamithabaiju @Jagadishbliss @LohithNK01 @RamVJ2412 @TSeries #JanaNayagan#JanaNayaganPongal #JanaNayaganFromJan9 pic.twitter.com/ofhWzvzyRx

மூலக்கதை