பிரபுசாலமனின் “கும்கி 2” டிரெய்லர் வெளியானது

  தினத்தந்தி
பிரபுசாலமனின் “கும்கி 2” டிரெய்லர் வெளியானது

பிரபுசாலமன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, லட்சுமி மேனன், தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடிப்பில் 2012ம் ஆண்டு வெளியான படம் '‘கும்கி’ விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. மேலும், இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்த சுகுமாருக்கும் நல்ல பெயர் கிடைத்தது. இந்தப் படத்தைத் தொடர்ந்து பல்வேறு பெரிய படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணிபுரிந்து வந்தார். தற்போது பிரபு சாலமன் - சுகுமார் கூட்டணி மீண்டும் இணைந்து‘கும்கி 2’படத்தில் பணிபுரிந்துள்ளது. இந்தப் படம் முழுக்க காடுகளுக்குள்ளே படமாக்கப்பட்டுள்ளது. ‘கும்கி 2’ படத்திற்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ளார். இந்த படத்தில், கதாநாயகனாக மதியழகன் அறிமுகம் ஆகிறார். வில்லனாக ஹரிஷ் பெராடி அறிமுகம் ஆகிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், டீசர் வெளியாகி வைரலானது. இப்படத்தின் ‘பொத்தி பொத்தி உன்னை வச்சி’ பாடல் சமீபத்தில் வெளியானது. இந்நிலையில், ‘கும்கி 2’ படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. இப்படம் நவம்பர் 14ம் தேதி வெளியாகிறது.#Kumki2 Trailer Out Now! A soulful story of friendship and trust between a man and his mighty companion. ❤️: https://t.co/VudXXquDfyKumki-2 from November 14.#BornAgain#PenMarudhar @jayantilalgada @gada_dhaval @prabu_solomon @mynnasukumar @mathioffl @ShritaRao… pic.twitter.com/4vdlromZSo

மூலக்கதை