“பராசக்தி” படத்தின் முதல் பாடல் வெளியீடு
சென்னை, இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ‘பராசக்தி’ படத்தில் நடித்துள்ளார். இவருடன் அதர்வா, ஸ்ரீலீலா, ரவி மோகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதில் சிவகார்த்திகேயன் கல்லூரி மாணவனாக நடித்திருக்கிறார். இப்படத்துக்கு ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். ஸ்ரீலீலா கதாநாயகியாக நடிக்கிறார்.இப்படம் இந்தி திணிப்பை மையமாக கொண்டு உருவாகி வருவதாக கூறப்படுகிறது. படத்தின் படப்பிடிப்பு காரைக்குடி, மதுரை, இலங்கை, பொள்ளாச்சியைத் தொடர்ந்து இறுதியாக சென்னையில் நடைபெற்று வந்த நிலையில், படப்பிடிப்பு முழுமையாக நிறைவு பெற்றுள்ளது.தற்போது இந்த படத்திற்கான பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. ‘பராசக்தி’ படத்தின் ஆடியோ உரிமையை சரிகம சவுத் நிறுவனம் பெற்றுள்ளது. அடுத்தாண்டு பொங்கல் விடுமுறையையொட்டி ஜனவரி 14-ந் தேதி 'பராசக்தி' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில், ‘பராசக்தி’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘அடி அலையே’ வெளியிடப்பட்டுள்ளது. சான் ரோல்டன், தீ குரலில் ஏகாதசி வரிகளில் ஜிவி பிரகாஷ் இசையில் சிவகார்த்திகயேன் - ஸ்ரீலீலா இடையேயான காதல் பாடலாக இது உருவாகி உள்ளது. Here’s the first single from #Parasakthi! Enjoy the vintage vibes #AdiAlaye - https://t.co/TtL4z3jckG pic.twitter.com/wM6o1AZIwu




காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு-டிரம்ப் நேரில் சந்திப்பு; காசா போர் முடிவுக்கு வருமா?
வங்காளதேசத்தில் சிறுமி பலாத்காரம்; ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 3 பேர் துப்பாக்கி சூட்டில் பலி
பிலிப்பைன்சை தொடர்ந்து வியட்நாமை தாக்கிய புயல்; 11 பேர் பலி
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
’ஓபன் செய்த உடன் ரீல்ஸ்’ இன்ஸ்டாகிராமில் வரும் சூப்பர் அப்டேட்
டெல்லி: திடீரென தாக்கிய குரங்கு; 7-வது மாடியில் இருந்து குதித்த மத்திய அரசு ஊழியர்
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு; நடவடிக்கை எடுக்க அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
ஆயுதபூஜை விடுமுறை: 4 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்
ஆயுத பூஜைக்கு மேலும் சில சிறப்பு ரெயில்கள் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
