விஜய்க்கு நல்லதே நினைத்து இருக்கிறேன்-நடிகர் அஜித் விளக்கம்
சென்னை, கரூரில் விஜய் நடத்திய தேர்தல் பிரசார கூட்டத்தில், நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. கரூர் விவகாரம் குறித்து நடிகர் அஜித்குமார் ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டி வைரலானது. அஜித் கூறுகையில்,''கரூர் சம்பவத்துக்குத் தனிநபர் மட்டுமே காரணமில்லை. நாம் அனைவருமே காரணம்தான். ஒரு சமூகமாகக் கூட்டத்தைக் கூட்டிக் காட்டுவதில் நாம் ஈடுபாடு காட்டுகிறோம். இது உடனடியாக முடிவுக்கு வர வேண்டும். கிரிக்கெட் போட்டிகளைப் பார்க்கவும் அதிக கூட்டம் வருகிறது. ஆனால் அங்கு இப்படி எதுவும் நடப்பதில்லை. சினிமா பிரபலங்களுக்கு மட்டும் இப்படி நடக்கிறது. முதல் நாள் முதல் காட்சி கலாசாரத்தை ஊடகங்கள் ஆதரிக்கக் கூடாது" என்றார். நடிகர் அஜித் குமாரின் இந்த கருத்து பெரும் கவனம் பெற்றது. ஒரு தரப்பினர் அஜித் விஜய்க்கு ஆதரவாக பேசினார் என்றும், இன்னொரு தரப்பினர் விஜய்க்கு எதிராக இந்த கருத்து உள்ளதாக கூறியதால் விமர்சனங்கள் எழுந்தன. விவாதங்களும் எழுந்தன. இதற்கிடையில் இதுகுறித்து அஜித்குமாரே விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:-கரூர் சம்பவம் துரதிர்ஷ்டவசமானது கரூரில் நடந்தது துரதிர்ஷ்டவசமானது. இதற்கு முன்பு ஆந்திரா சினிமா தியேட்டரில் நடந்துள்ளது. பெங்களூரு கிரிக்கெட் மைதானத்தில் நடந்துள்ளது. பல நாடுகளில் நடந்துள்ளது. பொதுவெளியில் எப்படி நடக்க வேண்டும் என்ற விதிமுறைகள் நான் உள்பட அனைவருக்கும் பொருந்தும். எனது இந்த கருத்துகள் தவறாக புரிந்து கொள்ளப்படாது என்று நம்புகிறேன். ஒரு சிலர் ரசிகர்கள் மீது பழியை சுமர்த்துகிறார்கள்.எனது பேட்டியை விஜய்க்கு எதிராக கட்டமைக்க முயற்சிக்கும் சிலர் அமைதியாக இருப்பது நல்லது. என்றுமே நான் விஜய்க்கு நல்லதே நினைத்து இருக்கிறேன். வாழ்த்தி இருக்கிறேன். எல்லாருமே அவரவர் குடும்பத்துடன் சந்தோஷமாக வாழ வாழ்த்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.




காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு-டிரம்ப் நேரில் சந்திப்பு; காசா போர் முடிவுக்கு வருமா?
வங்காளதேசத்தில் சிறுமி பலாத்காரம்; ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 3 பேர் துப்பாக்கி சூட்டில் பலி
பிலிப்பைன்சை தொடர்ந்து வியட்நாமை தாக்கிய புயல்; 11 பேர் பலி
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
’ஓபன் செய்த உடன் ரீல்ஸ்’ இன்ஸ்டாகிராமில் வரும் சூப்பர் அப்டேட்
டெல்லி: திடீரென தாக்கிய குரங்கு; 7-வது மாடியில் இருந்து குதித்த மத்திய அரசு ஊழியர்
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு; நடவடிக்கை எடுக்க அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
ஆயுதபூஜை விடுமுறை: 4 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்
ஆயுத பூஜைக்கு மேலும் சில சிறப்பு ரெயில்கள் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
