எனக்குப் பிடித்த ஹீரோயின் அவர்தான்.. விஷ்ணு விஷால் யாரை சொன்னார் தெரியுமா?

  தினத்தந்தி
எனக்குப் பிடித்த ஹீரோயின் அவர்தான்.. விஷ்ணு விஷால் யாரை சொன்னார் தெரியுமா?

சென்னை, பிரவீன் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான படம் ஆர்யன். இந்த படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், செல்வராகவன், மானசா சவுத்ரி உள்பட பலர் நடித்துள்ளனர். படம் திரைக்கு வந்து நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் படக்குழுவினரின் நன்றி அறிவிப்பு கூட்டம் சென்னையில் நடந்தது. விழாவில் விஷ்ணு விஷால் பேசுகையில், 3 வருடங்களுக்குப் பிறகு நான் தனி ஹீரோவாக நடித்த ஒரு படம் திரையரங்குகளுக்கு வருகிறது. படம் வெளியான முதல் வாரத்திலேயே ரசிகர்கள் எனக்கு அளித்த அன்பு அதை ஒரு சிறந்த படமாக மாற்றியுள்ளது. எனக்கு கிடைத்த வரவேற்பு அற்புதமானதாகவும் உள்ளது. நான் இதுவரை நடித்த கதாநாயகிகளில் எனக்கு பிடித்த கதாநாயகி ஷ்ரத்தா ஸ்ரீநாத். அவருடன் நடித்தது நல்ல அனுபவமாக இருந்தது. படத்தின் ஹீரோவாக இருக்கும் நீங்கள் செல்வராகவன் கேரக்டருக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறீர்களே என்று கேட்கிறார்கள். நான் கதைக்கு எது சரியாக இருக்கிறதோ அதைத்தான் செய்வேன். பார்வையாளர்களின் விருப்பத்திற்கு இணங்க கிளைமாக்ஸ் காட்சியில் நேற்று முதல் மாற்றம் செய்துள்ளோம். இவ்வாறு அவர் பேசினார்.

மூலக்கதை