கேஜிஎப் பட நடிகர் ஹரிஷ் ராய் காலமானார்
கேஜிஎப் திரைப்படத்தில் ஹரிஷ் ராய் நடித்த ஒரு முக்கிய பாத்திரத்தின் பெயர் சச்சா. கன்னட நடிகரான இவர் உபேந்திரா இயக்கத்தில் சிவராஜ்குமார் நடிப்பில் வெளியாகி வெற்றிபெற்ற ஓம் திரைப்படத்திலும் நடித்திருந்தார். கேஜிஎப் திரைப்படத்தில் நடிக்கும் போது, ஹரிஷ் ராய்க்கு அடிக்கடி மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இவர் தைராய்டு புற்றுநோயால் பாதிக்கபட்டிருந்தார்.அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், உடனடியாக புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என தெரிவித்தனர். தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு பணம் இல்லாததால், பெங்களூருவில் உள்ள அரசு புற்றுநோய் மருத்துவமனையில் அவருக்கு நுரையீரலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. மேலும் கீமோதெரபி சிகிச்சையையும் தொடர்ந்து செய்துகொண்டார். ஹரிஷுக்கு புதிய சிகிச்சை முறைகள் சிலவற்றை மருத்துவர்கள் பரிந்துரை செய்த நிலையில், அந்த சிகிச்சைக்கான செலவும் அதிகம் என்றாலும் தொடர்ந்து செய்து வந்தார். ஒரு மாதத்திற்கு மட்டும் இந்த சிகிச்சைக்கு 3 லட்சம் ரூபாய் செலவு செய்து வருவதாக தெரிவித்திருந்தார். சமீபத்தில், கோபி கவுத்ரு, உடல்நலம் பாதிக்கப்பட்ட நடிகரை சந்தித்து, ஹரிஷ் ராய் நிதி உதவி கேட்டு வெளிப்படையாக வேண்டுகோள் விடுத்த காணொளியை ஆன்லைனில் பகிர்ந்து கொண்டார். உடல்நிலை மேம்பட்டால் மீண்டும் நடிப்புக்குத் திரும்ப விருப்பம் தெரிவித்த அவர், தனது சிகிச்சைக்கான பெரும் செலவை வெளிப்படுத்தினார்.ஒரு ஊசிக்கு மட்டும் ரூ.3 லட்சம் செலவாகும் என்று ராய் கூறியிருந்தார்.தைராய்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்டு பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.




காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு-டிரம்ப் நேரில் சந்திப்பு; காசா போர் முடிவுக்கு வருமா?
வங்காளதேசத்தில் சிறுமி பலாத்காரம்; ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 3 பேர் துப்பாக்கி சூட்டில் பலி
பிலிப்பைன்சை தொடர்ந்து வியட்நாமை தாக்கிய புயல்; 11 பேர் பலி
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
’ஓபன் செய்த உடன் ரீல்ஸ்’ இன்ஸ்டாகிராமில் வரும் சூப்பர் அப்டேட்
டெல்லி: திடீரென தாக்கிய குரங்கு; 7-வது மாடியில் இருந்து குதித்த மத்திய அரசு ஊழியர்
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு; நடவடிக்கை எடுக்க அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
ஆயுதபூஜை விடுமுறை: 4 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்
ஆயுத பூஜைக்கு மேலும் சில சிறப்பு ரெயில்கள் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
