ஒரே நாளில் இரண்டு முறை உயர்ந்த தங்கம் விலை: எவ்வளவு கூடியுள்ளது?

  தினத்தந்தி
ஒரே நாளில் இரண்டு முறை உயர்ந்த தங்கம் விலை: எவ்வளவு கூடியுள்ளது?

சென்னை,கடந்த மாதம், தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து வரலாறு காணாத உச்சத்தை தொட்டது. தீபாவளி பண்டிகைக்கு பிறகே தங்கம் சற்று குறைய தொடங்கியது. இடையில் சில நாட்களில் ஏற்ற இறக்கத்துடன் விலை காணப்பட்டாலும், அதிக நாட்கள் விலை சரிந்ததால் இல்லத்தரசிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். அந்த வகையில் நேற்று கூட தங்கம் விலை கிராமுக்கு ரூ.70 குறைந்து ஒரு கிராம் ரூ.11,180க்கும், சவரனுக்கு ரூ.560 குறைந்து ஒரு சவரன் ரூ. 89,440க்கும் விற்பனை செய்யப்பட்டது.கடந்த 2 நாட்களுக்கும் மேலாக குறைந்து வந்த தங்கம் விலை இன்று காலை அதிரடியாக உயர்ந்தது. அதன்படி இன்று காலை நிலவரப்படி 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,250க்கும், சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 90,000க்கும் விற்பனை செய்யப்பட்டது. தங்கம் விலை திடீரென உயர்ந்தது இல்லத்தரசிகளை அதிர்ச்சி அடைய வைத்த சூழலில், மாலையிலும் விலை உயர்ந்துள்ளது. கிராமுக்கு ரூ.70ம், சவரனுக்கு ரூ.560-ம் தங்கம் விலை உயர்ந்தது. இன்று மாலை நிலவரப்படி ஒரு கிராம் தங்கம் விலை ரூ.11,320 ஆகவும், ஒரு சவரன் ரூ.90,560 ஆகவும் விற்பனையாகிறது.

மூலக்கதை