இராணுவ வீரர்கள் மீது இடிந்து விழுந்த சுவர்: முல்லைத்தீவில் பரபரப்பு - லங்காசிறி நியூஸ்

  இலங்காசிறி
இராணுவ வீரர்கள் மீது இடிந்து விழுந்த சுவர்: முல்லைத்தீவில் பரபரப்பு  லங்காசிறி நியூஸ்

முல்லைத்தீவில் உள்ள ராணுவ முகாமில் கட்டிட சுவர் இடிந்து விழுந்ததில் இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.முல்லைத்தீவு, முள்ளியவளையில் உள்ள 59 வது படைப்பிரிவு முகாமில் கைவிடப்பட்ட கட்டிடத்தின் செங்கல் சுவர் இடிந்து விழுந்ததில் இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அத்துடன் மேலும் 3 இராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு இன்று தெரிவித்துள்ளது.உயிரிழந்த இராணுவ வீரர் குருநாகலைச் சேர்ந்த 24 வயதுடைய இராணுவ வீரர் ஆவார். சம்பவம் இடம்பெற்ற போது உயிரிழந்த இராணுவ வீரரும், காயமடைந்த 3 இராணுவ வீரர்களும் விறகு சேகரித்துக் கொண்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தில் காயமடைந்த வீரர்கள் மூவரும் மாஞ்சோலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மூலக்கதை