சரிவை சந்தித்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன..?

  தினத்தந்தி
சரிவை சந்தித்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன..?

சென்னை, தங்கம் விலை கடந்த சில நாட்களுக்கு முன்பு உச்சத்தை தொட்டது. ஒரு சவரன் தங்கம் ரூ.97 ஆயிரத்தை தாண்டி விற்பனை செய்யப்பட்டது. தினமும் காலை, பிற்பகல் என இருவேளைகளிலும் தாறுமாறாக விலை உயர்ந்து வந்தது. இதே வேகத்தில் சென்றால், ஒரு சவரன் ரூ.1 லட்சத்தையும் தாண்டிவிடும் என்றெல்லாம் வியாபாரிகள் கூறி வந்தனர். இப்படி இருந்த சூழல் அப்படியே தலைகீழாக மாறியது. விலை ஏற்றம் ராக்கெட் வேகத்தில் இருந்த நிலையில், கடந்த 18-ந் தேதியில் இருந்து விலை இறக்கம் சீட்டுக்கட்டு போல சரியத் தொடங்கியது இதனைத்தொடர்ந்து தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற, இறக்கமாக இருந்து வருகிறது. இந்த சூழலில் வாரத்தின் முதல் நாளான நேற்று சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்திருந்தது. அதன்படி ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 350-க்கு விற்பனையாகிறது. அதேசமயம் சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ஒரு சவரன் ரூ.90 ஆயிரத்து 800-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதேபோல், வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.2 உயர்ந்து ஒரு கிராம் ரூ.168-க்கும், கிலோ ரூ.2 ஆயிரம் உயர்ந்து பார் வெள்ளி ரூ.1 லட்சத்து 68 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று தங்கம் விலை சரிவை சந்தித்துள்ளது. அதன்படி கிராமுக்கு ரூ.100-ம், சவரனுக்கு ரூ.800-ம் குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.11,250-க்கும், சவரன் ரூ.90,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல, வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது. இதன்படி வெள்ளிவிலை கிராமுக்கு ரூ.3 குறைந்து, ஒரு கிராம் ரூ.165க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.1 லட்சத்து 65 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த 5 நாட்களில் தங்கம் விலை நிலவரம்:- 04.11.2025 ஒரு சவரன் ரூ.90,000 (இன்று) 03.11.2025 ஒரு சவரன் ரூ.90,800 (நேற்று) 02.11.2025 ஒரு சவரன் ரூ.90,480 01.11.2025 ஒரு சவரன் ரூ.90,480 31.10.2025 ஒரு சவரன் ரூ.90,400 30.10.2025 ஒரு சவரன் ரூ.90,400

மூலக்கதை