தங்கம் விலை மீண்டும் உயர்வு...இன்றைய நிலவரம்

  தினத்தந்தி
தங்கம் விலை மீண்டும் உயர்வு...இன்றைய நிலவரம்

சென்னை, தங்கம் விலை கடந்த சில நாட்களுக்கு முன்பு உச்சத்தை தொட்டது. ஒரு சவரன் தங்கம் ரூ.97 ஆயிரத்தை தாண்டி விற்பனை செய்யப்பட்டது. தினமும் காலை, பிற்பகல் என இருவேளைகளிலும் தாறுமாறாக விலை உயர்ந்து வந்தது. இதே வேகத்தில் சென்றால், ஒரு சவரன் ரூ.1 லட்சத்தையும் தாண்டிவிடும் என்றெல்லாம் வியாபாரிகள் சொன்னார்கள். இப்படி இருந்த சூழல் அப்படியே தலைகீழாக மாறியது. கடந்த 18-ந் தேதியில் இருந்து விலை குறைந்தது. விலை ஏற்றம் ராக்கெட் வேகத்தில் இருந்த நிலையில், விலை இறக்கம் சீட்டுக்கட்டு போல சரியத் தொடங்கியது. இதன்படி நேற்று முன்தினம் தங்கம் விலை குறைந்திருந்தது.அதே விலை நேற்றும் நீடித்தது. நேற்று கிராமுக்கு ரூ.25-ம், சவரனுக்கு ரூ.200-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.11,300-க்கும், ஒரு சவரன் ரூ.90,400-க்கும் விற்பனையானது. இந்த நிலையில் இன்று தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. அதன்படி கிராமுக்கு ரூ.10-ம், சவரனுக்கு ரூ.80-ம் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.11,310-க்கும், சவரன் ரூ.90,480-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையும் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.165-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 65 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மூலக்கதை