யாழ்ப்பாணத்தில் போதைப்பொருளுடன் பிடிபட்ட 5 பேர்: பொலிஸார் விசாரணை - லங்காசிறி நியூஸ்

  இலங்காசிறி
யாழ்ப்பாணத்தில் போதைப்பொருளுடன் பிடிபட்ட 5 பேர்: பொலிஸார் விசாரணை  லங்காசிறி நியூஸ்

யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் 5 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாண பொலிஸார் இந்த சம்பவத்தில் ஒரு பெண் மற்றும் நான்கு ஆண்கள் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வெளியான தகவலின் படி,  2 கிராம் 300 மில்லி கிராம் ஹெரோயினுடன் ஒரு ஆணும், 2 கிராம் 150 மில்லி கிராம் ஹெரோயினுடன் ஒரு பெண்ணும் 80 மில்லி கிராம் ஹெரோயினுடன் மூன்று ஆண்களும் கைது செய்யப்பட்டு இருப்பதாக தெரியவந்துள்ளது. கைதான சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளுக்கு பின்னர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். 

மூலக்கதை