காலையில் குறைந்து, மாலையில் அதிகரித்த தங்கம் விலை.!

  தினத்தந்தி
காலையில் குறைந்து, மாலையில் அதிகரித்த தங்கம் விலை.!

சென்னை,தங்கம் விலைதங்கம் விலை கடந்த 17-ந்தேதி ஒரு சவரன் ரூ.97 ஆயிரத்தை கடந்து புதிய உச்சத்தை தொட்டது. அதன் பின்னர் விலை குறையத் தொடங்கியது. அதன்படி, கடந்த 23-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை சவரனுக்கு ரூ.9 ஆயிரம் சரிந்து, ஒரு சவரன் தங்கம் ரூ.89 ஆயிரத்துக்கு கீழ் வந்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. விலை தொடர்ந்து குறைந்து கொண்டே வந்த சூழலில், மேலும் விலை குறையும் என நேற்று எதிர்பார்த்த பலருக்கு தங்கம் விலை அதிர்ச்சியை கொடுத்தது. தொடர்ந்து குறைந்துவந்த தங்கம் விலை நேற்று மீண்டும் ஏற்றம் கண்டது. நேற்று காலையில் கிராமுக்கு ரூ.135-ம், சவரனுக்கு ரூ.1,080-ம், பிற்பகலில் கிராமுக்கு ரூ.115-ம், சவரனுக்கு ரூ.920-ம் உயர்ந்தது. மொத்தத்தில் நேற்று ஒரே நாளில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.250-ம், சவரனுக்கு ரூ.2 ஆயிரமும் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.11,325-க்கும், ஒரு சவரன் ரூ.90,600-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று தங்கம் விலை அதிரடியாக குறைந்து, மீண்டும் ஒரு சவரன் ரூ.89 ஆயிரத்துக்கு கீழ் வந்தது. காலை சவரனுக்கு ரூ.1,800 குறைந்து, ஒரு சவரன் ரூ.88,800 ஆகவும், கிராமுக்கு ரூ.225 குறைந்து, ஒரு கிராம் ரூ.11,100-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போதைய நிலவரம்; இந்த சூழலில் தற்போது தங்கம் விலை மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை பிற்பகல் நிலவரப்படி சவரனுக்கு ரூ.1,600 அதிகரித்து ஒரு சவரன் ரூ.90,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.200 அதிகரித்து ஒரு கிராம் ரூ.11,300-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை காலையில் கிராமுக்கு ரூ.1 குறைந்து, ஒரு கிராம் ரூ.165-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், பிற்பகலில் மாற்றமின்றி அதே விலையில் தொடர்கிறது.

மூலக்கதை