நகை பிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி: ஏறிய வேகத்துடன் இறங்கும் தங்கம் விலை

  தினத்தந்தி
நகை பிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி: ஏறிய வேகத்துடன் இறங்கும் தங்கம் விலை

சென்னை, தீபாவளி பண்டிகைக்கு முன்பு ஒரு சவரன் விலை ரூ.97 ஆயிரத்தை தாண்டி வரலாற்று சாதனை படைத்தது. அதன்பிறகு தங்கம் விலை தீபாவளி பண்டிகைக்கு பிறகு தொடர்ந்து குறைந்து வருகிறது. சென்னையில் கடந்த 23-ந்தேதி தங்கத்தின் விலை சவரன் ரூ.92 ஆயிரமாக குறைந்தது. தொடர்ந்து 24-ந்தேதி தங்கத்தின் விலை குறைந்து ரூ.91 ஆயிரத்து 200-க்கு விற்பனையானது. கடந்த 25-ந்தேதி சற்று உயர்ந்து சவரன் ரூ.92 ஆயிரமாக அதிகரித்தது. 26-ந்தேதியும் அதேவிலையில் விற்பனையானது. இந்த சூழலில் தங்கம் விலை நேற்று மீண்டும் குறைந்தது. இதன்படி நேற்று சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ.91 ஆயிரத்து 600-க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.50 குறைந்து ஒரு கிராம் ரூ.11,450-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலையில் கடந்த 7 நாட்களாக மாற்றமின்றி (நேற்றும்) 1 கிலோ வெள்ளி ரூ.1 லட்சத்து 70 ஆயிரத்துக்கும், 1 கிராம் ரூ.170-க்கும் விற்பனை செய்யப்பட்டது. தங்கம் விலை இந்த நிலையில் தீபாவளிக்கு முன்பு ஏறிய வேகத்துடன் தங்கம் விலை குறைந்து வருகிறது. இன்று காலை தங்கம் விலை மேலும் சரிவை சந்தித்தது. அதன்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,200 குறைந்து ஒரு சவரன் ரூ.90,400-க்கு விற்பனை ஆனது. கிராமுக்கு ரூ.150 குறைந்து ஒரு கிராம் ரூ.11,300-க்கு விற்பனை செய்யப்பட்டது.இந்தநிலையில், மேலும் தங்கம் விலை மாலையிலும் சரிந்தது. அதன்படி, தங்கம் விலை காலையில் சவரனுக்கு ரூ.1,200 குறைந்த நிலையில் மாலையில் மேலும் ரூ.1,800 குறைந்துள்ளது. சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரன் ரூ.1,800 குறைந்து ரூ.88,600க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் கிராமுக்கு ரூ.225 குறைந்து ரூ.11.075க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.3,000 சரிந்துள்ளது.வெள்ளி விலை வெள்ளி விலை காலையில் ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ. 165 என்ற நிலையில் தற்போது விலையில் மாற்றம் இல்லை. தீபாவளிக்கு பிறகு படிப்படியாக தங்கம் விலை குறைந்து கொண்டிருப்பது நகை பிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தங்கம் விலை வரும் நாட்களில் மேலும் குறையும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

மூலக்கதை