இலங்கை பொது மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள எச்சரிக்கை! பிரமிட் திட்டம் தொடர்பில் முக்கிய அறிவிப்பு - லங்காசிறி நியூஸ்

  இலங்காசிறி
இலங்கை பொது மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள எச்சரிக்கை! பிரமிட் திட்டம் தொடர்பில் முக்கிய அறிவிப்பு  லங்காசிறி நியூஸ்

இலங்கை பொதுமக்களுக்கு பிரமிட் திட்டம் தொடர்பில் கவனமாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இலங்கையில் பெரும் வருமானம் திரட்டும் நோக்கில் செயல்பட்டு வந்த தனியார் நிறுவனத்தின் பிரமிட் திட்டம் தொடர்பாக தலைமை பொலிஸ் அதிகாரிக்கு புகார் கிடைக்கபெற்றதை அடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் 23ம் திகதி 7 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் ரத்மலானை, பன்னிப்பிட்டிய, கல்னேவ, ஹோகந்தர, பேராதெனிய மற்றும் கொழும்பு ஆகிய பகுதிகளில் வசிக்க கூடிய 40 முதல் 64 வயதுக்கு உட்பட்டவர்கள் என தெரியவந்துள்ளது. மேலும் இத்தகைய திட்டங்களை மக்களிடையே அறிமுகப்படுத்துதல், விளம்பரப்படுத்துதல் மற்றும் ஆட்களை சேர்த்தல் போன்றவை சட்டவிரோத நடவடிக்கை என்றும், இது போன்ற செயல்களுக்கு உதவிபவர்கள் அபராதம் அல்லது சிறை தண்டனை ஆகியவற்றை எதிர்கொள்ள நேரிடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.பிரமிட் திட்டம் என்பது தனிப்பட்ட நபரை சேர்ப்பதன் மூலம் அல்லது திட்டத்தில் பங்கேற்பாளர்களின் பங்களிப்பை அதிகரிக்க செய்வதன் மூலம் கிடைக்க கூடிய நன்மைகளை வழங்கும் திட்டமாகும். இது போன்ற வணிக முறைகள் எங்கேனும் நடந்தால் அல்லது விளம்பரப்படுத்தப்பட்டால் உடனடியாக காவல் நிலையத்தை அல்லது இலங்கை மத்திய வங்கிக்கு தகவல் தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மூலக்கதை