தங்கம் விலை சரிவுக்கு காரணம் என்ன?.. மேலும் குறையுமா.. நிபுணர்கள், வியாபாரிகள் என்ன சொல்கிறார்கள்..?
சென்னை, தங்கம் விலை ஜெட் வேகத்தில் உயர சென்று கொண்டிருந்த நிலையில், நேற்று இல்லத்தரசிகளுக்கும், நகை பிரியர்களுக்கும் இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக அதிரடியாக சரிந்து வருகிறது. நிதிச்சந்தையில் ஏற்பட்ட பணத்தட்டுப்பாடு காரணமாக முதலீட்டாளர்கள் தங்கத்தை விற்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டு இருப்பதாகவும், மேலும் உலகளவில் முக்கிய பங்குச்சந்தைகள் வரலாற்று உச்சங்களை எட்டியிருப்பதால், முதலீட்டாளர்கள் அதிக லாபம் ஈட்டும் நோக்கில் தங்கத்தில் இருந்து பங்குகள் மீது தங்கள் கவனங்களை திருப்பி இருப்பதாலும், அமெரிக்க டாலரின் மதிப்பு வலுவடைந்து இருப்பதாலும் தங்கத்தின் விலை குறைவதாக உலகளவில் சொல்லப்படுகிறது. மேலும் சில பொருளாதார நிபுணர்கள், வியாபாரிகள் பொதுவாக ஒரு பொருள் குறுகிய காலத்தில் ஏற்றம் கண்டால், அது இறங்கத்தான் செய்யும். அந்த வகையில் தற்போது விலை குறைந்து இருப்பதாக கூறுகிறார்கள். இதுதொடர்பாக பொருளாதார நிபுணர் சோம.வள்ளியப்பன் கூறுகையில், “உலகம் முழுவதும் பல்வேறு தரப்பினர் அதாவது, பங்குகளாகவும், தங்க ஒப்பந்தங்களாகவும், டாலருக்கு பதிலாகவும் தங்கத்தை வாங்கி இருக்கிறார்கள். இவர்கள் யாரும் தங்கத்தை விற்கவில்லை. ஆனால் தங்கம் விலை உயருகிறது. இன்னும் உயரும் என எதிர்பார்ப்பில் தங்களிடம் இருக்கும் பணம் முழுவதையும் மட்டுமல்ல, மேற்கொண்டு வட்டிக்கு பணம் வாங்கி அதனைக்கொண்டு தங்கத்தை வாங்கியவர்கள், இப்போது நல்ல விலை உயர்வில் தங்கம் இருக்கிறது இந்த வாய்ப்பை பயன்படுத்தி லாபம் பார்த்துவிட வேண்டும் என்ற நோக்கில், அதனை விற்று வெளியேறுகிறார்கள். இதனை கண்டு, சொற்ப லாபத்துக்காக தங்கத்தை வாங்கியவர்களும் அதனை விற்க முன்வந்துள்ளனர். அதனாலேயே தங்கம் விலை குறைகிறது. இந்த விற்கும் போக்கு ஒரு அலை போல சற்று தூரம் இழுத்து சென்று ஒரு இடத்தில் நிற்கும். அதன்பிறகு தங்கம் விலை உயரும். ஆனால் எப்போது வாங்கும் அலை நின்று, விற்கும் அலை தொடங்கும் என்பதையும், விற்கும் அலை நின்று வாங்கும் அலை தொடங்கும் என்பதையும் கணித்து கூறுவது சிரமம்” என்று அவர் கூறினார். இதனிடையே அமெரிக்கா - சீனா இடையேயான புவிசார் அரசியல் பேச்சுவார்த்தை சுமூகமாக மாறியதாலும், முதலீட்டாளர்கள் தங்கம் மூலம் கிடைத்த பங்குகளை விற்று லாபம் ஈட்ட முடிவு செய்து இருப்பதாலும், பெடரல் வங்கி வட்டி விகிதத்தில் எதிர்பார்த்த மாற்றத்தை செய்யும் என நம்பிக்கை தெரிவித்து இருப்பதால் அமெரிக்க டாலரின் மதிப்பு உயரத் தொடங்கியதாலும் தங்கம் விலை வீழ்ச்சி அடைந்ததாக சர்வதேச நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இது அடுத்த வாரம் நடைபெறும் கூட்டத்தில் பெடரல் வங்கி மேலும் வட்டி விகிதத்தை குறைக்கும் என்ற சந்தை எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளநிலையில், தங்கத்தின் விலையை மேலும் குறையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.




காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு-டிரம்ப் நேரில் சந்திப்பு; காசா போர் முடிவுக்கு வருமா?
வங்காளதேசத்தில் சிறுமி பலாத்காரம்; ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 3 பேர் துப்பாக்கி சூட்டில் பலி
பிலிப்பைன்சை தொடர்ந்து வியட்நாமை தாக்கிய புயல்; 11 பேர் பலி
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
’ஓபன் செய்த உடன் ரீல்ஸ்’ இன்ஸ்டாகிராமில் வரும் சூப்பர் அப்டேட்
டெல்லி: திடீரென தாக்கிய குரங்கு; 7-வது மாடியில் இருந்து குதித்த மத்திய அரசு ஊழியர்
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு; நடவடிக்கை எடுக்க அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
ஆயுதபூஜை விடுமுறை: 4 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்
ஆயுத பூஜைக்கு மேலும் சில சிறப்பு ரெயில்கள் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
