கொழும்பில் அவசர கால பேரிடர் எச்சரிக்கை: உஷார் நிலையில் மீட்பு படையினர் - லங்காசிறி நியூஸ்

  இலங்காசிறி
கொழும்பில் அவசர கால பேரிடர் எச்சரிக்கை: உஷார் நிலையில் மீட்பு படையினர்  லங்காசிறி நியூஸ்

கொழும்பில் அவசர கால பேரிடர் நிலை எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.கொழும்பில் அக்டோபர் 16ம் திகதி முதல் எதிர்வரும் 18ஆம் திகதி வரை அவசர கால பேரிடர் நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. மேல் குறிப்பிட்ட நாட்களில் கொழும்பு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த காற்று, இடி மற்றும் பயங்கர மின்னலுடனான மழை பெய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த அவசர கால நிலையில் பாதிக்கப்படும் பொதுமக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் விரைவாக மேற்கொள்ளப்படும் என்றும் கொழும்பு மாநகர சபை அறிவித்துள்ளது. அவசர கால பேரிடர் நிலை அறிவிக்கப்பட்டதை அடுத்து மீட்பு படையினர் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.\வானிலை ஆய்வு மையத்தின் அறிவுறுத்தலின் படி, பல பகுதிகளுக்கு கனமழை மற்றும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் தயார் நிலையில் இருக்கவும், அவசர தேவைகளுக்கு உடனடியாக கொழும்பு நகர சபையை தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் அவசர கால உதவிக்கு, 011-2422222 மற்றும்  011-2686087 உள்ளிட்ட எண்களை தொடர்பு கொள்ளுமாறு கொழும்பு வாழ் மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மூலக்கதை