வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி: இலங்கை வெளிநாட்டு பணியகம் வெளியிட்ட அறிவிப்பு - லங்காசிறி நியூஸ்

  இலங்காசிறி
வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி: இலங்கை வெளிநாட்டு பணியகம் வெளியிட்ட அறிவிப்பு  லங்காசிறி நியூஸ்

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி கும்பல் தொடர்பில் இலங்கை வெளிநாட்டு பணியகம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.வெளிநாட்டில் வேலைவாய்ப்பு என்று மோசடியில் ஈடுபடும் தனிநபர் மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தொடர்பான தகவல்கள் இருந்தால் தங்களுடைய சிறப்பு புலனாய்வுப் பிரிவுக்கு தகவல்  தெரிவிக்குமாறு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் பொதுமக்களிடம் வேண்டுகோள் முன்வைத்துள்ளது. யாரேனும் இது தொடர்பான தகவல் வைத்து இருந்தால் 0112 882228 என்ற தொலைபேசி எண் மூலம் சிறப்பு புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளிடம் தெரிவிக்கலாம் என்று இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. மேலும், வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக மோசடியில் ஈடுபடுவது தொடர்பாக புகார்கள் அதிக அளவில் வரத் தொடங்கி இருப்பதாகவும், அதில் ஈடுபடுபவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கிடையில் கடந்த இரண்டு நாடுகளில், வெளிநாடுகளில் வேலை வாங்கி தருவதாக பண மோசடியில் ஈடுபட்ட பெண் உட்பட இரண்டு பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில், கிரிபத்கொடையைச் சேர்ந்த ஒரு பெண்ணிடம் துபாயில் வேலை வாய்ப்பு வழங்குவதாக கூறி ரூ.800,000 பெற்ற ஒரு பெண்ணும், வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகாம் என குருநாகலில் ஹோட்டல் ஒன்றில் நேர்காணல் நடத்திய நபர் ஒருவரும் அடங்குவர்.

மூலக்கதை