வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான வெற்றி - கேப்டன் சுப்மன் கில் கூறியது என்ன..?

  தினத்தந்தி
வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான வெற்றி  கேப்டன் சுப்மன் கில் கூறியது என்ன..?

அகமதாபாத், ரோஸ்டன் சேஸ் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. அதன்படி இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்தது. இந்த போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 140 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என இந்தியா முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டெஸ்ட் போட்டி வரும் 10ம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில், முதலாவது டெஸ்டில் வெற்றி பெற்ற பின்னர் இந்திய கேப்டன் சுப்மன் கில் அளித்த பேட்டியில் கூறியதாவது, 6 ஆட்டங்களில் தொடர்ச்சியாக டாசை இழந்தாலும், நாங்கள் தொடர்ந்து போட்டிகளில் வெற்றி பெறும் வரை அது ஒரு பொருட்டல்ல. இது எங்களுக்கு ஒரு நேர்த்தியான ஆட்டம் என்று நினைக்கிறேன். நாங்கள் 3 சதம் (லோகேஷ் ராகுல், துருவ் ஜுரெல், ரவீந்திர ஜடேஜா) அடித்தோம். நன்றாக பீல்டிங் செய்தோம். அதனால் எங்கள் ஆட்டத்தில் எந்தவித குறையும் இல்லை. ஆடுகளம் பேட்டிங்குக்கு நன்றாக இருந்தது. நானும், ஜெய்ஸ்வாலும் நல்ல தொடக்கம் கண்டாலும் அதனை பெரியதாக மாற்றவில்லை. அதேநேரத்தில் மற்றவர்கள் சதம் அடித்ததை நினைத்து மகிழ்ச்சி அடைகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை