பி.எஸ்.என்.எல். 4ஜி சேவை இன்று தொடக்கம்

  தினத்தந்தி
பி.எஸ்.என்.எல். 4ஜி சேவை இன்று தொடக்கம்

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல். 4ஜி சேவையை இன்று முதல் தொடங்குகிறது. ஒடிசாவில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி 4 ஜி சேவையை தொடங்கிவைக்கிறார். ஏற்கனவே 2.2 கோடி வாடிக்கையாளர்களுக்கு 4 ஜி சேவை பிஎஸ்என்எல் சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. இதனை நாடு முழுவதும் விரிவுபடுத்தும் வகையில், 29 ஆயிரம் முதல் 30 ஆயிரம் கிராமங்களுக்கு 100 சதவீத 4ஜி சேவை வழங்கும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ள 14 ஆயிரத்து 180 4ஜி வலை பின்னல் கோபுரங்களை பிரதமர் மோடி இன்று துவங்கி வைக்கிறார். இதன் மூலமாக குறைந்த கட்டணத்தில் 120 கோடி வாடிக்கையாளர்களுக்கு இணைய மற்றும் தொலைபேசி அழைப்பு சேவைகளை வழங்கி வரும் நாடாக இன்று இந்தியா உருவெடுக்கவுள்ளது. இதனால், 5ஜி சேவையையும் மிகவும் எளிமையாக அறிமுகப்படுத்த முடியும். இந்த 4ஜி சேவையுடன், டிஜிட்டல் பாரத் நிதி மூலம் இந்தியாவின் 100 சதவீத 4ஜி செறிவு நெட்வொர்க்கையும் அறிமுகப்படுத்த இருப்பதாக மத்திய மந்திரி ஜோதிராதித்ய சிந்தியா கூறினார்.

மூலக்கதை