சபரிமலை செல்லும் பக்தர்கள் வசதிக்காக கொல்லம்-ஹூப்பள்ளி இடையே வாராந்திர சிறப்பு ரெயில்

சென்னை, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- சபரிமலை செல்லும் பக்தர்களின் வசதிக்காக ஹூப்பள்ளி-கொல்லம் இடையே வாராந்திர சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது. அதன்படி, கர்நாடக மாநிலம் ஹூப்பள்ளியில் இருந்து வரும் 28-ந்தேதி முதல் டிசம்பர் 28-ந்தேதி வரையில் (ஞாயிற்றுக்கிழமை) மாலை 3.15 மணிக்கு புறப்பட்டு கொல்லம் செல்லும் வாராந்திர சிறப்பு ரெயில் (வண்டி எண்.07313), சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர் வழியாக மறுநாள் மதியம் 12.55 மணிக்கு கொல்லம் சென்றடையும். மறுமார்க்கமாக, கொல்லத்தில் இருந்து வரும் 29-ந்தேதி முதல் டிசம்பர் 29-ந்தேதி வரையில் (திங்கட்கிழமை) மாலை 5 மணிக்கு புறப்பட்டு ஹூப்பள்ளி செல்லும் வாராந்திர சிறப்பு ரெயில் (07314), இதே வழித்தடம் வழியாக மறுநாள் மாலை 6.30 மணிக்கு ஹூப்பள்ளி சென்றடையும். இந்த ரெயில்களுக்கான முன்பதிவு இன்று (வியாழக்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்க உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மூலக்கதை
