மராட்டியம் கனமழைக்கு 11 பேர் பலி; 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

  தினத்தந்தி
மராட்டியம் கனமழைக்கு 11 பேர் பலி; 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

புனே, மராட்டியத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று (திங்கட்கிழமை) காலை முதல் கனமழை பெய்து வருகிறது. இதில், மும்பை, தானே, ராய்காட் மற்றும் பால்கார் ஆகிய 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடப்பட்டு உள்ளது. கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால், கடல் அலைகள் பல அடி உயரத்திற்கு எழும்பும் என தெரிவிக்கப்பட்டது. பல்வேறு நகரங்களிலும் கனமழையால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. சாலைகள், கட்டிடங்கள் வெள்ள நீரால் சூழப்பட்டு உள்ளன. மராட்டியத்தில் கனமழைக்கு 11 பேர் பலியாகி உள்ளனர். இதனை தொடர்ந்து, வெள்ளம் பாதித்த பகுதிக்கு செல்ல வேண்டாம் என மக்களுக்கு அரசு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. ரத்னகிரி, சிந்துதுர்க், அகல்யாநகர் மற்றும் சத்ரபதி ஷம்பாஜி நகர் பகுதிகளுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. நாசிக், துலே மற்றும் நந்தர்பார் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டது. கனமழையை தொடர்ந்து, கோதாவரி ஆற்றில் நீர் திறந்து விடப்பட்டது. நிலைமையை முதல்-மந்திரி பட்னாவிஸ் ஆய்வு செய்ததுடன், வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு நேரடியாக சென்று, களப்பணியாற்றும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளார்.

மூலக்கதை