சின்மயி குரலில் “ஆரோமலே” படத்தின் 2வது பாடல் வெளியீடு

  தினத்தந்தி
சின்மயி குரலில் “ஆரோமலே” படத்தின் 2வது பாடல் வெளியீடு

சென்னை, பிரபல யூடியூபரான கிஷன் தாஸ் தற்போது அடுத்தடுத்த படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் ஏற்கனவே 'முதலும் நீ முடிவும் நீ' என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதை தொடர்ந்து சிங்க், தருணம் ஆகிய படங்களில் நடித்திருந்தார். யூடியூபர் ஹர்ஷத் கான், விஜே சித்துவுடன் இணைந்து பல வீடியோக்களை பதிவிட்டு இளைஞர்களை கவர்ந்து வருகிறார். கடந்த ஆண்டு வெளியான 'டிராகன்' திரைப்படத்தில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இது தவிர விஜே சித்து இயக்கி நடிக்க உள்ள 'டயங்கரம்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள புதிய படத்திலும் நடிக்க உள்ளார் ஹர்ஷத் கான். கிஷன் தாஸ், ஹர்ஷத் கான் ஆகிய இருவரும் இணைந்து புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளனர். இந்த படத்தை மினி ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. சாரங் தியாகு இந்த படத்தை இயக்க சித்து குமார் இதற்கு இசையமைக்கிறார். இந்த படத்திற்கு 'ஆரோமலே' என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. இப்படம் தொடர்பாக புரோமோ வீடியோ வெளியாகி வைரலானது. ‘ஆரோமலே’ படத்தின் 'டண்டணக்கா லைப்' எனத்தொடங்கும் பாடல் வெளியாகி வைரலானது. அதனை தொடர்ந்து, தற்போது இந்த படத்திலிருந்து 2வது பாடலான "எப்படி வந்தாயோ" என்ற பாடல் வெளியாகி உள்ளது. இந்த பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இப்பாடலை சின்மயி மற்றும் ஆனந்த் அரவிந்தாக்ஷன் இணைந்து பாடியுள்ளனர். பாடல் வரிகளை பாடியுள்ளார். பாடல் வரிகளை விக்னேஷ் ராமகிருஷ்ணா எழுதியுள்ளார்.Congrats to the entire team​ of #Aaromaley​ and here is latest song #EppadiVandhaayo https://t.co/vBDgCVMEX9@Sarang_Thiagu @Chinmayi ​#AnandAravindakshan @vinod_offl @aditi1231 @kishendas @ShivathmikaR @anirudhsriraman @editorpraveen @Its_Gowtham_R pic.twitter.com/AILxmHaKTm

மூலக்கதை