பிரதீப் ரங்கநாதனின் “டியூட்” படத்திலிருந்து "சிங்காரி" பாடல் வெளியீடு

சென்னை, தமிழ் சினிமாவில் 'கோமாளி' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். இவரது நடிப்பில் சமீபத்தில் டிராகன் படம் வெளியாகி நல்லவரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து இவர், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் 'லவ் இன்ஸுரன்ஸ் கம்பெனி'என்ற படத்தில் நடித்துள்ளார். அதனை தொடர்ந்து கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் ‘டியூட்’ படத்திலும் நடித்துள்ளார். மைத்ரீ மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் ‘டியூட்’ படத்தில் நாயகியாக மமிதா பைஜு நடித்துள்ளார். இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்துள்ள இந்தப் படத்தில் சரத் குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். முழுவதுமாக காமெடி கலந்த படமாக இப்படம் வரும் 17ம் தேதி வெளியாக உள்ளது. இதற்கிடையில் இப்படத்திலிருந்து ''ஊரும் பிளட்'' என்ற பாடல் வெளியாகி இணையத்தில் வைரலானது. அதனை தொடர்ந்து தற்போது "சிங்காரி" என்ற பாடல் வெளியாகி உள்ளது. இந்த பாடலை பிரதீப் ரங்கநாதன், சாய் அபியங்கர், சாய் ஸ்மிருதி இணைந்து பாடியுள்ளனர். பாடல் வரிகளை சஞ்சய் செம்வி எழுதியுள்ளார். DUDE'S THIRD GEAR #Singari out now #Singari (Tamil) in the vocals of @pradeeponelife ▶️ https://t.co/1oLySCnd14Music by @SaiAbhyankkar Tamil vocals - @pradeeponelifeTamil lyrics - #Semvii#Dude in cinemas on October 17th ✨⭐ing 'The Sensational'… pic.twitter.com/KPNyBEg3fl
மூலக்கதை
