அருள்நிதி நடித்துள்ள "ராம்போ" படத்தின் டிரெய்லர் வெளியீடு

சென்னை, அருள்நிதி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர். 'வம்சம், மவுனகுரு, டிமாண்டி காலனி, ஆறாது சினம், இரவுக்கு ஆயிரம் கண்கள், கே-13' உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமடைந்தார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான 'டிமான்டி காலனி 2' படம் வசூல் ரீதியாகவும், விமர்சனம் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் இவர் கொம்பன் படத்தினை இயக்கிய முத்தையா இயக்கத்தில் "ராம்போ" என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் தான்யா ரவிச்சந்திரன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் அபிராமி, விடிவி கணேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். குத்துச் சண்டையை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படம் வருகிற 10-ந் தேதி சன்நெக்ஸ் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாக உள்ளது. இந்த நிலையில், இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. இந்த டிரெய்லர் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. No mercy. No limits. No escape. Fury has a name… and it’s RAMBO.Arulnithi is RAMBO. Raw, Relentless, and Unstoppable.Trailer out now. Premieres Oct 10 | Only on SunNXT#DirectToOTT #RamboOnSunNXT #SunNXTExclusive #TamilMoviePremiere #FightForTruth #Arulnithi… pic.twitter.com/CRlyyUnTaP
மூலக்கதை
