கவின் நடித்துள்ள "மாஸ்க்" படத்தின் புரோமோ வெளியீடு

சென்னை, தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் கவின். இவர் 'லிப்ட், டாடா, ஸ்டார்' போன்ற படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான ‘கிஸ்’ படம் கலவையான விமர்சனங்களையே பெற்றுவருகிறது. அதனை தொடர்ந்து அறிமுக இயக்குனர் விக்ரனன் அசோக் இயக்கும் ‘மாஸ்க்’ படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் கவினுடன் ஆண்ட்ரியா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். தெலுங்கு நடிகையான ருஹானி ஷர்மா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், சார்லி, பாலா சரவணன், விஜே அர்ச்சனா, சந்தோக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தை வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம்ஸ் நிறுவனமும், பிளாக் மெட்ராஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளன. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. அதனை தொடர்ந்து தற்போது இப்படத்தின் புரோமோ வீடியோ வெளியாகி உள்ளது. அந்த புரோமோ வீடியோவில் இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான "ஆலங்கட்டி" என்ற பாடல் வருகிற 6ந் தேதி வெளியாகும் என்று தெரிவித்துள்ளனர்."Alexa, play a GV Prakash song"#Aalankatti#Mask pic.twitter.com/YN1Eevl5RQ
மூலக்கதை
