மோகன்லாலுக்கு கேரள அரசு பாராட்டு

திருவனந்தபுரம், டெல்லியில் நடந்த 71வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவின் போது ஜனாதிபதி திரௌபதி முர்முவிடமிருந்து மோகன்லால் ‘தாதா சாகேப் பால்கே’ விருதை சமீபத்தில் பெற்றார். மோகன்லால் மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் 350-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இன்று லால் சலாம் நிகழ்ச்சி நடைபெற்றது. அரசியல் - பண்பாட்டு நிகழ்வான இதில் மாநில முதல்வர் பினராயி விஜயன், அமைச்சர்கள், திரைப்பிரபலங்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். நிகழ்வில், இந்தாண்டு தாதா சாகேப் விருது பெற்ற நடிகர் மோகன்லாலை மரியாதை செய்யும் விதமாக மாநில அரசு நினைவு விருதை வழங்கியது. இதுகுறித்து பேசிய கேரள முதல்வர் பினராயி விஜயன், “நடிகர் மோகன்லால் ஒவ்வொரு மலையாளிகளின் பெருமை. 1984ம் ஆண்டு மட்டும் 34 திரைப்படங்களில் நடித்து ஆச்சரியப்படுத்தினார். இன்று நடிக்கும் நடிகர்கள் ஆண்டிற்கு 2 அல்லது 3 படங்களில் மட்டுமே நடிக்கின்றனர். மோகன்லால் தன் பன்முகத்திறமையால் போற்றப்படுபவர்.” என பாராட்டினார்.நிகழ்வில் பேசிய மோகன்லால், “டில்லியில் விருது வாங்கியதைவிட சொந்த ஊரில் பாராட்டுகளைப் பெறுவது உணர்வுப்பூர்வமாக இருக்கிறது. இங்குதான் நான் பிறந்து, வளர்ந்தேன். இதன் காற்றும், நினைவும் எப்போதும் என் ஆன்மாவின் பகுதியாகவே இருக்கிறது. சில உணர்வுகளை நடிக்க முடியாது. நான் வெற்றிகளையும் விமர்சனங்களையும் எதிர்கொண்டிருக்கிறேன். ஆனால், எப்போதும் இரண்டையும் சமமாகவே எண்ணுகிறேன். இந்த சமூகமும் ரசிகர்களும் இல்லையென்றால் என்னால் எதையும் சாதித்திருக்க முடியாது” என்றார்.A tribute soaring high! Chief Minister Pinarayi Vijayan honours Dadasaheb Phalke Award winner #Mohanlal on behalf of the #KeralaGovernment.#lalsalam #kerala pic.twitter.com/yGc14WIOtB
மூலக்கதை
