விஷ்ணு விஷாலின் “ஆர்யன்” படத்தின் திரையரங்க வெளியீட்டு உரிமையை பெற்ற பிரபல நிறுவனம்

  தினத்தந்தி
விஷ்ணு விஷாலின் “ஆர்யன்” படத்தின் திரையரங்க வெளியீட்டு உரிமையை பெற்ற பிரபல நிறுவனம்

சென்னை, வெண்ணிலா கபடிகுழு, நீர்ப்பறவை, முண்டாசுப்பட்டி, ராட்சசன், கட்டா குஸ்தி போன்ற படங்களின் மூலம் பிரபலமானவர் விஷ்ணு விஷால். இவர் கடைசியாக ஐஷ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய லால் சலாம் திரைப்படத்தில் நடித்து இருந்தார். விஷ்ணு விஷால் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ‘ஆர்யன்’. இப்படத்தை அறிமுக இயக்குனரான பிரவீன் இயக்கியுள்ளார். இதில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், வாணி போஜன் மற்றும் செல்வராகவன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சாம். சி எஸ் இசையமைக்க விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ளது. இந்த நிலையில் ‘ஆர்யன்’ படத்தின் கர்நாடக, தெலுங்கு திரையரங்க வெளியீட்டு உரிமையை பிரபல நிறுவனமான கேஆர்ஜி மற்றும் ஸ்ரேஷ்த் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.#Aaryan - Karnataka theatrical release by @KRG_Studios In theatres on the 31st of October, in Tamil and Telugu!@TheVishnuVishal @VVStudioz @adamworx @selvaraghavan @ShraddhaSrinath @Maanasa_chou @GhibranVaibodha @dop_harish @Sanlokesh @silvastunt @PC_stunts @jayachandran46… pic.twitter.com/gceskjtQkx

மூலக்கதை