ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ்: சின்னெர் 3-வது சுற்றுக்கு முன்னேற்றம்

ஷாங்காய், ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தர வரிசையில் 2-வது இடம் வகிக்கும் இத்தாலி நாட்டை சேர்ந்த ஜானிக் சின்னெர், 2-வது சுற்றில் டேனியல் ஆல்ட்மெயரை எதிர்கொண்டார். இந்த போட்டியில், 6-3, 6-3 என்ற புள்ளி கணக்கில் டேனியலை வீழ்த்தி 3-வது சுற்றுக்கு முன்னேறினார். சின்னெர் இதற்கு முன்பு, பீஜிங் ஓபன் 2023 மற்றும் பீஜிங் ஓபன் 2025, ஷாங்காய் மாஸ்டர்ஸ் 2024 ஆகிய 3 பட்டங்களை வென்றிருக்கிறார். அவர் 3-வது சுற்றில் டால்லன் கிரீக்ஸ்பூரை எதிர்த்து விளையாடுவார்.
மூலக்கதை
