3வது டி20: நியூசிலாந்தை வீழ்த்தி தொடரை வென்ற ஆஸ்திரேலியா

  தினத்தந்தி
3வது டி20: நியூசிலாந்தை வீழ்த்தி தொடரை வென்ற ஆஸ்திரேலியா

வெல்லிங்டன், ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 ஆடியது. இதில் முதல் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றிருந்தது. 2வது போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது. இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 3வது போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 20 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 156 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து 157 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய ஆஸ்திரேலியா 18 ஓவரில் 7 விக்கெட்டை மட்டும் இழந்து 160 ரன் எடுத்து வெற்றி பெற்றத். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-0 என ஆஸ்திரேலியா கைப்பற்றியது

மூலக்கதை