சீனா ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் அனிசிமோவா- நோஸ்கோவா

  தினத்தந்தி
சீனா ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் அனிசிமோவா நோஸ்கோவா

பீஜிங், சீனா ஓபன் டென்னிஸ் போட்டி பீஜிங்கில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த மகளிர் ஒற்றையர் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 3-வது இடத்தில் இருப்பவரும், நடப்பு சாம்பியனுமான கோகோ காப் (அமெரிக்கா), சகநாட்டவரான அமன்டா அனிசிமோவாவை சந்தித்தார். 58 நிமிடம் நடந்த இந்த மோதலில் அனிசிமோவா 6-1, 6-2 என்ற நேர் செட்டில் கோகோ காப்பை எளிதில் தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முதல் முறையாக முன்னேறினார். மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் லின்டா நோஸ்கோவா (செக்குடியரசு) 6-3, 1-6, 7-6 (8-6) என்ற செட் கணக்கில் 7-ம் நிலை வீராங்கனை ஜெசிகா பெகுலாவுக்கு (அமெரிக்கா) அதிர்ச்சி அளித்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார். இந்த ஆட்டம் 2 மணி 28 நிமிடம் நீடித்தது. கோப்புப்படம்

மூலக்கதை