ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ்: 3வது சுற்றில் அதிர்ச்சி தோல்வி கண்ட ரூப்லெவ்

பீஜிங், ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற 3வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரரான ஆண்ட்ரே ரூப்லெவ் (ரஷியா) - ஜப்பானின் யோஷிஹிட்டோ நிஷியோகா உடன் மோதினார். இந்த போட்டியின் முதல் செட்டை 6-2 என்ற புள்ளிக்கணக்கில் ரூப்லெவும், 2வது செட்டை 6-1 என்ற புள்ளிக்கணக்கில் யோஷிஹிட்டோ நிஷியோகாவும் கைப்பற்றினர். இதன் காரணமாக வெற்றியாளரை தீர்மானிக்கும் 3வது செட்டில் அனல் பறந்தது. இந்த 3வது செட்டில் யாரும் எதிர்பார்க்கா வண்ணம் அபாரமாக செயல்பட்ட யோஷிஹிட்டோ நிஷியோகா 6-4 என்ற புள்ளிக்கணக்கில் ரூப்லெவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். தோல்வி கண்ட ரூப்லெவ் தொடரில் இருந்து வெளியேறினார்.
மூலக்கதை
