ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு - ஒருநாள் போட்டிக்கு கில் கேப்டனாக நியமனம்

  தினத்தந்தி
ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு  ஒருநாள் போட்டிக்கு கில் கேப்டனாக நியமனம்

மும்பை, இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி பெர்த்தில் வருகிற 19-ந் தேதியும், 2-வது ஒருநாள் போட்டி அடிலெய்டில் 23-ந் தேதியும், 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி சிட்னியில் 25-ந் தேதியும் நடக்கிறது. இதனை தொடர்ந்து டி20 போட்டிகள் அக்டோபர் 29-ந்தேதி முதல் நவம்பர் 6-ந்தேதி வரை நடக்கிறது. இந்த நிலையில் ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருநாள் போட்டிக்கு சுப்மன் கில் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். டி20 மற்றும் டெஸ்டில் இருந்து ஓய்வு பெற்று விட்ட ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்களில் நடந்த சாம்பியன்ஸ் கோப்பைக்கு பிறகு ஒருநாள் போட்டிக்கான அணிக்கு திரும்பியிருக்கிறார்கள். ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி விவரம் வருமாறு:- சுப்மன் கில் (கேப்டன்), ரோகித் சர்மா, விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர் (துணை கேப்டன்), அக்சர் படேல், கே.எல்.ராகுல் (விக்கெட் கீப்பர்), நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஹர்சித் ராணா, முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா, துருவ் ஜூரெல் (விக்கெட் கீப்பர்), யஷஸ்வி ஜெய்ஸ்வால். டி20 போட்டிக்கான இந்திய அணி விவரம் வருமாறு:- சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), அபிஷேக் சர்மா, சுப்மன் கில் (துணை கேப்டன்), திலக் வர்மா, நிதிஷ் குமார் ரெட்டி, ஷிவம் துபே, அக்சர் படேல், ஜிதேஷ் ஷர்மா (விக்கெட் கீப்பர்), வருண் சக்கரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், ஹர்சித் ராணா, சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ரிங்கு சிங், வாஷிங்டன் சுந்தர். India’s squad for Tour of Australia announcedShubman Gill named #TeamIndia Captain for ODIsThe #AUSvIND bilateral series comprises three ODIs and five T20Is against Australia in October-November pic.twitter.com/l3I2LA1dBJ

மூலக்கதை