இலங்கையின் முதல் வதிவிட விசா: வரலாற்றில் இடம் பிடித்த ஜேர்மன் நாட்டவர் - லங்காசிறி நியூஸ்

  இலங்காசிறி
இலங்கையின் முதல் வதிவிட விசா: வரலாற்றில் இடம் பிடித்த ஜேர்மன் நாட்டவர்  லங்காசிறி நியூஸ்

இலங்கை தனது வரலாற்றில் முதல் முறையாக வதிவிட விசாவை வழங்கியுள்ளது. இந்த முக்கிய நிகழ்வானது புதிய திருத்தப்பட்ட குடிவரவு மற்றும் குடியகல்வு ஒழுங்கு விதிகளின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்ட தனிநபர் முதலீட்டாளர் பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ளன. இலங்கையின் இந்த முதல் வதிவிட விசாவை ஜேர்மன் பிரஜையான கலாநிதி ப்ரே ட்ரெக்ஸ்செல் (Dr. Prey Drechsel) என்பவர் பெற்றுள்ளார். இந்த அதிகாரப்பூர்வமான விசா வழங்குதலை பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால செய்துள்ளார். இலங்கையில் முதலீடு செய்வதன் மூலம் வெளிநாட்டினர் இலங்கையில் இந்த நீண்டகால வதிவிட விசாவைப் பெற்றுக்கொள்ளலாம். 5 வருட வதிவிட விசா பெறுவதற்கு 100,000 அமெரிக்க டொலர் அல்லது (அதற்கு நிகரான வெளிநாட்டு நாணய மதிப்பு) இலங்கையில் முதலீடு செய்ய வேண்டும். இதைப்போல 10 வருட வதிவிட விசா பெறுவதற்கு 200,000 அமெரிக்க டொலர் அல்லது (அதற்கு நிகரான வெளிநாட்டு நாணய மதிப்பு) இலங்கையில் முதலீடு செய்ய வேண்டும். விண்ணப்பதாரர்கள் தமது முதலீட்டுத் தொகையை வைப்புச் செய்வதற்காக, அங்கீகாரம் பெற்ற இலங்கையின் வங்கியில் விசா நிகழ்ச்சித் திட்டம் வெளிநாட்டு நாணயக் கணக்கு (VPFCA) ஒன்றை திறப்பது கட்டாயமாகும். இந்த புதிய நடைமுறை வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருப்பதாக பார்க்கப்படுகிறது.

மூலக்கதை